Store
  Store
  Store
  Store

யார் ஞானி? புத்தக விமர்சனம் சக்தி விகடன் 4.9.2009


   கேள்வி கேட்டு அதற்கு உரிய பதிலைப் பெறுவதில் உள்ள் சுகமே தனி! இந்து மதத்தில் கேள்வி - பதில் வடிவில் பல நூல்கள் உள்ளன உதாரணமாக யக்ஷ ப்ரச்னம், ப்ரச்னோத்தர ரத்னமாலிகா, போன்ற நூல்களைக் குறிப்பிடலாம். திருக்குறளில்கூட, பல பாக்களும் கேள்வி- பதில் முறையிலேயே இருக்கின்றது.

இந்த நூலும் கேள்வி-பதில் வடிவிலேயே தொகுக்கப்பட்டிருக்கிறது பூஜ்ய ஸ்ரீ இராமானந்த குரு அவர்களிடம், சீடர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு குருநாதர் அளித்த பதில்களும் சுவாரஸ்யமான முறையில் வரிசையாக இடம்பெற்றுள்ளன.

ஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீமத்வர் ஆகியோரின் தத்துவ விளக்கங்கள் எளிமையாக சொல்லப்பட்டுள்ளன. ஆதிசங்கரரின் கொள்கைகளைவிட ஸ்ரீராமானுஜரின் கொள்கைகள் அதிகம் பரவியதற்கான காரணமும், பிற்காலத்தில் ஸ்ரீவைஷ்ணவம் சற்றே தளர்ச்சி அடைந்ததைப் போலத் தோன்றுவதற்கான காரணமும் அருமையாகத் தரப்பட்டுள்ளது. வடக்கே வைணவக் கொள்கை கொடிகட்டிப் பறக்க காரணம், தென்னாட்டில் இருந்து சென்ற ஓருவர்தான்; அவரை, காந்தியடிகள் தன் முன்னோடியாகக் கொண்டார் என்ற அருந்தகவலையும் அழகாக விவரிக்கிறது இந்த நூல். கால எல்லைக்கு உட்பட்டாத வேத காலத்தில் இருந்து,
கன்ஃபூசியஸ் காலம் வரை; கண்ணன் காலத்திலிருந்து காந்தியடிகள் காலம் வரை இருந்த ஆன்மீக கருத்துகள் பளிச்சிடுகின்றன. இன்றுள்ள, உலகளாவிய தீவிரவாதத்தைக் கண்டிப்பதுடன், தீவிரவாதத்துக்கான மருந்தையும் சொல்கிறது இந்த நூல்

நம் நாட்டு மதங்கள், மகான்கள், அவர்களது கொள்கைகள் என்று மட்டும் இல்லாமல், உலகம் முழுவதும் இருக்கும் மதங்களையும்,மகான்களையும் கால வரிசைப்படி ஆராய்ந்திருப்பது தனிச் சிறப்பு பல வகையிலும் சிறந்த இந்த நூலில், அச்சுப் பிழைகள் ஆங்காங்கே தலைநீட்டுவதைத் தவிர்த்திருக்கலாம்

சக்தி விகடன் 4.9.2009