Store
  Store
  Store
  Store

டாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் !


    மது அரசியல் ஜாம்பவான்கள் தினசிரி உதிர்க்கும் கருத்து முத்துக்களை பொறுக்கி எடுத்து இடையில் எனது நையாண்டியையும் கோர்த்து வாசகர்களுக்காக ஒரு சின்ன மாலை கட்டியுள்ளேன் படித்து பாருங்கள் பரவாயில்லை யென்றால் மீண்டும் தொடர்வோம் முகம் சுழிக்க வைத்தால் இத்துடன் முடித்துக் கொள்வோம்
 
"அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள, ஐ.ஐ.சி.எம்., பல்கலைக் கழகம் சார்பில், சிறந்த சமூகசேவை புரிந்ததற்காக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு நேற்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சென்னை சேத்துப்பட்டில் நடந்த விழாவில், ஐ.ஐ.சி.எம்., பல்கலைக் கழக நிர்வாகி ஜான் வில்லியம்ஸ், டாக்டர் பட்டத்தை விஜயகாந்திற்கு வழங்கினார். இதில் சென்னை ஏ.சி.ஐ.,- டையோசிஸ் தலைவர் ஜெயக்குமார், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, கேப்டன் "டிவி' நிர்வாக இயக்குனர் சுதீஷ்,  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்."
 
 
 
 விஜயகாந்த் அவர்களூக்கு டாக்டர் பட்டம் கிடைத்திருப்பதினால் தமிழ் மக்களுக்கு பெருங்குறை தீர்ந்து விட்டது எனலாம் இங்கு இயற்கனவே டாக்டர் கலைஞர், டாக்டர் ஜெ. ஜெயலலிதா, டாக்டர் சுப்பிரமணியம்ஸ்வாமி டாக்டர் ராமதாஸ் என்று ஏகப்பட்ட டாக்டர்களின் கூட்டம் இப்போது டாக்டர் புரட்சிக்கலைஞர் ! தமிழ் நாட்டுக்கு இப்படியொரு நல்ல காலம் அது சரி இத்தனை டாக்டர்களும் வயித்தியம் யாருக்கு பார்ப்பது? அட! இது தெரியாதா? நம்ம தமிழ்குடி மக்கள்தான் வெகுநாட்களாக நோயாளியாகத்தானே கிடக்கிறார்கள்? இனி இந்த டாக்டருக்கும் சேர்த்து பீஸ் கட்டி சாகட்டும்!