Store
  Store
  Store
  Store

இலங்கையின் ஜனாதிபதி புத்தரின் வாரிசு


   அமெரிக்க அரசின் ரகசியத் தகவல்கள் பலவற்றை கைப்பற்றியுள்ள விக்கிலீக்ஸ் அவற்றை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பேட்ரிக் ஏ.பட்னிஸ் இலங்கை போர் தொடர்பாக அமெரிக்க அரசுக்கு அனுப்பிய ரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

  இதில், இலங்கையில் போரின் போது அப்பாவித் தமிழர்கள் பலரும் ஈவு இரக்கமின்றி ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அதிபர் ராஜபட்ச, அரசுப் பொறுப்புகளில் உள்ள அவரது தம்பிகள், ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா ஆகியோர் தான் காரணம். போரின் போது மனித உரிமைகளை மீறி, இலங்கை ராணுவத்தினர் செயல்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது. இத்தகவல் இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.



  லங்கையின் ஜனாதிபதி போர்குற்றவாளி என்று சொல்வது யார்?

 அவர் மனிதகுலத்தின் துயர் துடைக்க வந்த புத்தரின் வாரிசு தமிழ்மக்கள் சொந்த நாட்டிலேயே அடிமைகளாய் ஆடுமாடுகளாய் கிடந்து துன்பத்தில் உழலுகிறார்களே என்ற பச்சாதாபத்தில் அவர்களை விண்ணுலகிற்கு அனுப்பி வைத்த உத்தமர் அவரை குற்றவாளி என்றால் பூமி தாங்காது இப்படித்தான் இந்திய அரசாங்கம் நினைக்கிறது இந்த எண்ணம் மாறுகின்றவரை யார் என்ன சொல்லியும் எதுவும் ஆகாது இதுதான் தமிழனின் தலைவிதி !