( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )Share !
This Post

கல்வி தானம் செய்யுங்கள்

 

  வாசகர்களுக்கு வணக்கம்."ஊர்கூடி தேர் இழுப்போம்" என்கிற பதிவை பார்த்த பின்பு நிறைய அன்பர்கள் தொலைபேசி வாயிலாகவும் பின்னூட்டத்தின் மூலமாகவும் உங்களது ஆதரவை தெரிவித்தமைக்கு நன்றி. அதற்கு முன்னோட்டமாக உங்களிடம் ஒரு வேண்டுகோள்.

    நமது உஜிலாதேவி தளத்தை தொடர்ந்து படித்துவரும் தமிழ்மாறன் என்ற மாணவர் தனது கல்விக்காக உதவி கேட்டு மின்னஞ்சல் ஒன்றை எனக்கு அனுப்பியிருந்தார் நான் என்னால் ஆன உதவிகளை செய்வதாக அவருக்கு வாக்களித்துள்ளேன் நான் ஒருவன் மட்டுமே செய்யும் உதவி அவருக்கு போதுமானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது இதைப் படிக்கும் நீங்களும் உங்களால் ஆன ஒத்தாசைகளை செய்தால் இன்னும் சிறப்பாகவும் நிறைவாகவும் இருக்கும் என்று கருதி கீழ்காணும் விபரங்களை தருகிறேன்

   திருN. தமிழ்மாறன் அவர்கள் அண்ணாமலை பல்கலைகழகத்தில் M .Sc (E & C ) ஒருங்கிணைந்த பாடத்திட்டம்  படித்து விட்டு விரிவுரையாளராக ஒரு கல்லூரியில் பணியாற்றினார். பின்பு விரிவுரையாளராக தொடர வேண்டும் என்றால் M .Tech படிக்க வேண்டும் என்கிற சூழ் நிலைக்கு உட்படுத்தபட்டதானால் தற்போது அவர் VIT பல்கலை கழகத்தில் முதலாமாண்டு Communication Systems படித்து வருகிறார்.

    முதலாமாண்டு கல்விகட்டணத்தை அவர் சில தனியார் நிதி நிறுவனங்களிடம்  இருந்து வட்டிக்கு பெற்று செலுத்தி உள்ளார். மேலும் அவர் படிப்பிலும் சிறந்து விளங்குபவர்.பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் அண்ணாமலை பல்கலை கழகத்திலும் அவர் 80 சதவீதத்திற்கும் மேலான மதிப்பெண்ணை பெற்று உள்ளார். அவருக்கு நீங்கள் எதாவது ஒரு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் அவரின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு அவருக்கு தேவையானதை செய்யுங்கள். ஒரு கல்விசுடரின் ஒளி உங்களால் சுடர்விட்டு பிரகாசிக்கட்டும்.


மாணவர் தமிழ்மாறனின்  பேசி எண் : +91-9597380736

உஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற