Store
  Store
  Store
  Store

லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் நான் நெருப்பு மாதிரி





    மது அரசியல் ஜாம்பவான்கள் தினசிரி உதிர்க்கும் கருத்து முத்துக்களை பொறுக்கி எடுத்து வாசகர்களுக்காக ஒரு சின்ன மாலை கட்டியுள்ளேன் படித்து பாருங்கள் பரவாயில்லை யென்றால் மீண்டும் தொடர்வோம் முகம் சுழிக்க வைத்தால் இத்துடன் முடித்துக் கொள்வோம்

"சென்னை கோபாலபுரம் வீட்டைத்தவிர எந்த ஒரு பெரிய வீடோ, தோட்டமோ அல்லது எஸ்டேட்டோ நான் வாங்கவில்லை. அரசு நிலத்தை ஆக்கிரமித்ததில்லை. அரசு நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கியதுமில்லை. இந்நிலையில், என்னை ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் என சிலர் கூறி வருகின்றனர்.

எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உற்றார் உறவினர்கள் தங்களுக்கென நிலங்களையோ வீடுகளையோ வாங்கியிருக்கலாம். ஆனால் அவற்றிற்கு நான் எந்தவித நிதியுதவியும் செய்யவில்லை. தமிழ் திரைப்படங்களில் திரைக்கதை எழுத அந்த காலத்திலேயே அதிகளவில் சம்பளம் வாங்கியவன் நான். தி.மு.க., வின் எந்த பதவியிலும், பொறுப்பிலும் இல்லாத போதே கோபாலபுரம் வீட்டை நான் வாங்கினேன். தற்போது என் வங்கிக்கணக்கில், வைப்பு தொகையாக ரூ. 5 கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134ம்ல சேமிப்பு தொகையாக ரூ. 35 லட்சத்து 90 ஆயிரத்து 86 ம் மட்டுமே உள்ளது. எனக்கிருந்த வீட்டைக்கூட மருத்துவமனைக்காக தானமாக கொடுத்து விட்டேன். லஞ்ச ஊழலைப் பொறுத்த வரையில், எனது உதவியாளர்கள் கூறுவது போல் நான் ஒரு நெருப்பு” என்றும் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்."


   திரு.கருணாநிதி நிச்சயம் பொது வாழ்விலும் லஞ்ச விஷயங்களிலும் நெருப்புத்தான் அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை ஆனால் அந்த நெருப்பு எதன் மீது எரிகிறது என்பதை கவனிக்க வேண்டும் பசுங் காடுகளின் மீதும் வீட்டு கூரைகளின் மீதும் எரிகிறதே என்பதுதான் அனைவரின் அங்கலாய்ப்பு!

  தன் குடும்பத்தார் சம்பாத்தியத்திற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்கிறார் ஒரு சாதாரண குப்பன் சுப்பன் பிள்ளைகள் சம்பாதிக்க முடியாத நினைத்துப் பார்க்கவே இயலாத சொத்துக்களை அவர்கள் எப்படி பெற்றார்கள் அதற்கு மூலதனம் கொடுத்தது யார் என்பதையும் அவர் திறந்த புத்தகமாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் அப்படிச் சொல்லாத வரை முதல்வரின் கூற்று குரூர நகைச்சுவையாகவே நீடிக்கும்